Description
Illuppai Oil | Cold Mahua Oil | இலுப்பை எண்ணெய்
Premium Cold Mahua Oil is crafted using traditional methods to ensure the highest quality and purity. This oil is not only a culinary delight but also offers numerous health benefits.
Five Health Benefits
- Boosts immunity and fights infections.
- Promotes healthy skin and hair.
- Aids in digestion and improves gut health.
- Supports heart health by lowering cholesterol.
- Acts as a natural anti-inflammatory agent.
Consultations Available
For personalized guidance on incorporating premium cold mahua oil into your lifestyle, consult with our experts who can tailor advice to your individual health needs.
இலுப்பை எண்ணெய் பயன்கள்
- மனித உடலின் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் தன்மை உடையது.
- நஞ்சு பூச்சி கடி, கரப்பான், கடுமையான இடுப்பு வலி இவற்றிற்கு இந்த எண்ணையை தடவி வந்தால் எளிதில் குணமடையலாம்.
- நரம்பு பலவீனத்தால் உண்டாகக்கூடிய நடுக்கம், வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணி.
- இடுப்பு வலி, மூட்டு வலி, கை, கால்கள் வலி ஆகியவற்றிற்கு இந்த எண்ணையை, சிறிது மென்மையாக சூடேற்றி, அதை தடவி பின்னர் மிதமான வெந்நீரில் சுத்தம் செய்து, தூய்மைப்படுத்திக் கொண்டால் எளிதில் குணமடையும்.
- ஆண்களுக்கு ஏற்படும் விரை வீக்கம் போன்ற கடுமையான பிரச்சனைகளுக்கு இந்த எண்ணெய் ஒரு அற்புதமான மருந்து. இந்த எண்ணையை சிறிது சூடுபடுத்தி நான்கைந்து முறை தடவி வந்தாலே இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம்.
- சருமத்தை மிருதுவாக்கும், தோல் சுருக்கங்களை நீக்கும்.
- வாரம் ஒரு முறை நன்றாக உடலில் தேய்த்து ஒரு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான சுடுநீரில் இதை கழுவி குளித்து வந்தால், சருமம் பளபளப்பாக அற்புதமாக இருக்கும்.
- விஷப்பூச்சிகள் கடித்தால் அந்த விஷத்தை முறிக்கும் சக்தி வாய்ந்தது இந்த அற்புதமான எண்ணெய்.
- விஷப் பூச்சிகளின் கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம் போன்றவற்றை சரி படுத்தும் தன்மையுடையது இந்த எண்ணெய்.
- கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் உண்டாகும், வயிற்றுப்போக்கு போன்றவற்றை எளிதில் குணமாக்கும் தன்மை உடையது.
- குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல் போன்றவற்றிற்கும் இந்த எண்ணெய் அருமையான மருந்து ஆகும்.
- காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு சில துளிகளை இந்த எண்ணெயை சாப்பிடுவதன் மூலம் இந்த மாதிரியான பிரச்சனைகளை எளிதில் தீர்த்துக் கொள்ளலாம்.
- கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தாலும், சிலருக்கு இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்திருப்பதாலும் உண்டாகக்கூடிய கண் எரிச்சல், கண் அயர்ச்சி, கண்வலி போன்ற பிரச்சனைகளுக்கு இது அருமையான மருந்து ஆகும். அதற்கு இலுப்பை எண்ணெயை அடிக்கடி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மேற்கண்ட பிரச்சினைகளை தவிர்த்து கொள்ளலாம்.
- கண்பார்வையும் மிகத்தெளிவாக அமையும்.
- வயிற்றில் செரிமான மண்டலத்தை சீர் அடையச் செய்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை உடையது இந்த எண்ணெய்.
- சில துளிகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காச நோய் கிருமிகளையும் ஆஸ்துமா கிருமிகளையும் அழிக்கும் தன்மை வாய்ந்தது இந்த எண்ணெய்.
- ஆக மொத்தமாக இந்த இலுப்பை எண்ணெய் ஒரு தெய்வீக தன்மை கொண்டதாக அமைந்திருக்கிறது.
விளக்கேற்ற சரியான நேரமும், பலன்களும் :
ஆன்மீக ரீதியாக எடுத்துக்கொண்டால் சிவபெருமானுக்கு உகந்த எண்ணெய்களில் முதன்மையானதாகவும், சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுவது இந்த எண்ணெய்.
பிரம்ம முகூர்த்த வேளையில் வெள்ளை நிற திரியிட்டு, இலுப்பை எண்ணெய்யை கொண்டு பஞ்ச முகங்கள் கொண்ட குத்து விளக்கேற்றுவது உயர்வானது. மாலையில் இந்த விளக்கை ஏற்றலாம். அதிலும் மங்கலகரமான வெள்ளிக்கிழமையில் இலுப்பை எண்ணெய்யில் தொடர்ந்து விளக்கேற்றி வந்தால் அஷ்ட லக்ஷ்மிகளின் அருளும், ஐஸ்வர்யமும் குடும்பத்தில் உள்ளனர்கள் அனைவருக்கும் கிடைக்கும். மஞ்சள் நிற திரியிட்டு தீபம் ஏற்றி வந்தால் குபேர அருளும், திருமணம், குழந்தை பேறு போன்ற பாக்கியங்களும் கிடைக்கும்.
வெள்ளை பஞ்சு திரியில் மஞ்சளை தேய்த்து, உலற வைத்து மஞ்சள் திரியாகவும் ஏற்றலாம். சிவப்பு நிற திரியால் விளக்கேற்றினால் வறுமை, கடன், பல விதமான தோஷங்கள் நீங்கும். பொதுவாக விளக்குகளை நெய் கொண்டு ஏற்றினால் மகாலட்சுமி அருள் கிடைக்கும் என்பார்கள். ஆனால் ஆயிரம் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவதன் பலனை ஒரே ஒரு இலுப்பை எண்ணெய் விளக்கு ஏற்றி வழிபடும் போது பெற்று விடலாம். இலுப்பை எண்ணெய்க்கு அந்த அளவிற்கு தெய்வீக சக்தியை ஈர்க்கும் ஆற்றல் உண்டு.
Reviews
There are no reviews yet.